Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வாட்டி வதைக்கும் வெயில்! எகிறிய இளநீர் விலை

வாட்டி வதைக்கும் வெயில்! எகிறிய இளநீர் விலை

உள்ளூரிலேயே போதுமான அளவிற்கு இளநீர் விளைச்சல் இல்லாததால், வெளி மாவட்டங்களில் இருந்து இளநீர் கொண்டுவரப்படுவதால் செலவுகள் அதிகரிக்கிறது

பகிரவும் WhatsApp Facebook

வெயில் காலம் முடிவடைந்தும் வெப்பம் குறையவில்லை. இதனால் இளநீர் விலை உயர்ந்துள்ளது.

 
கரூர் மாவட்டத்தில் கோடை காலம் முடிந்தும் வெயில் குறையவில்லை. அவ்வப்போது மழை பெய்தாலும் பகல் வேளைகளில் வெயில் கொளுத்தி வருகிறது. தென்னை மரங்களுக்கு தேவையான நீர் கிடைக்காததால் கரூர் மாவட்டத்தில் வரத்து குறைந்து பிற மாவட்டங்களில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.


பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை, மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் இளநீர் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. கடந்த மாதம் 30, 35 ரூபாய் என விலை இருந்தது. தற்போது இளநீர் ஒன்றுக்கு 40 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது.

 
உள்ளூரிலேயே போதுமான அளவிற்கு இளநீர் விளைச்சல் இல்லாததால், வெளி மாவட்டங்களில் இருந்து இளநீர் கொண்டுவரப்படுவதால் செலவுகள் அதிகரிக்கிறது. இதனால் மேலும் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி
Udhayanidhi condemns CM Vijay on medical workers house arrest
அடுத்த செய்தி
சென்செக்ஸ் 548 புள்ளிகள் சரிவு

தொடர்புடைய செய்திகள்